நீரோடை வடித்த சிற்பங்கள்
நீரோடை வடித்த சிற்பங்கள்
ஓடும் நீரோடை
இது
கண்ணாடியாய்
உள்ளுக்குள் தெரிகிறது
வகை வகை
உருவங்களாய்
சிறு கற்கள்
வளைவு நெளிவாய்
வழுக்கையாய்
சொரசொரப்பாய்
வடிவங்களாய்
வடித்து வைத்த
தோற்றங்கள்
அத்தனையும்
இதன் ஓட்டத்தில்
உரசியே உருவான
சிற்பங்கள்