கண்ணாடி நிலவு

- - - - - - - - - - - - - - - -
கண்ணாடி முன்
நின்று கத்தியை
எடுக்கிறேன்
சவரம் செய்ய. ...
அங்கேயும்
விம்பமாய் நீ
முடியவில்லை
மீண்டு திரும்பினேன்
வளர்கிறது
கருந்தாடி !
காதல் தோல்வியா
குத்துகிறது வினாக்கள்

எதிர்த்த வீட்டு
ஜன்னல் சட்டை
எட்டி எட்டி உதைக்கிறது
விண்ணில்
தவண்ட நிலவு
எப்படி
உள் வீட்டுக்குள்
நுளைந்தது ?

என் வீட்டு
எல்லையில்
சலனமற்று பூத்த
மாதுளை
முத்து முத்தாக
சிரித்து உதிர்த்து
இனிக்கிறது
என்னுள் !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (8-Jan-16, 9:18 pm)
Tanglish : kannadi nilavu
பார்வை : 109

மேலே