தேன்கூடே தெளிவாயடி
தேன்கூடே தெளிவாயடி!
தண்டையிலே சலங்கிட்டு
தனியே போகையிலே
கெண்டை விழிகளாலே
கோடிகதைக் கூறாயோ?
மானே! மயிலே
மரகத குயிலே
தேனே! தெள்ளமுதே!
தெவிட்டாத அடிக்கரும்பே!
கன்னத்தில் குழிவிழும்
கள்ளச் சிரிப்பூடே…
எண்ணத்தை அலைகழிக்கும்
எழிலுருவே! உன்செவ்
வண்ணஇதழில் தேனினை
வடித்திட யான்
திண்ணமாய் உள்ளேன்!
தேன்கூடே தெளிவாயடி!
---- கே. அசோகன்.