குரங்கு
மனமே...
ஏன் மாறிக்கொண்டே இருக்கின்றாய்?
ஒன்று விட்டு ஒன்று தாவும்
குரங்கின் குணம் இன்னும் போகலையோ?
உயிராய் ஒன்றை நேசித்தால்;
மாறிட எண்ணம் தோன்றிடுமோ?
நிலையில்லா நீர்க்குமிழ் போல்..
நித்தம் நித்தம் மாறுகிறாய்!
நிலையில்லா உலகு இதுவெனவே..
நிலையற்று நீயும் போனாயோ?
எளிதாய் நீயும் மாறிவிட்டாய்..,
குழம்பித் தவிப்பவன் நான் தானே!!
சரியோ தவறோ தெரியாமல்,
நாளும் அழுவது என் விதியோ?
மாற்றம் என்பது அவசியமே..
அனால் அதில் இத்தனை அவசரம் கூடாது!!
உன் போக்கை அறிய முடியாமல்
புலம்பித் தவிக்கிறேன் நாள் தோறும்..!
நிலையாய் நின்றிடு என் மனமே..
நிமதி வேண்டும் என் வசமே..!
முடிவொன்று நீயும் எடுத்து விட்டால்..
பின்வாங்க என்றும் எண்ணாதே!
ஓடிக்கொண்டே இருப்பதற்கு..
ஒரு முறை
விழுந்து மீண்டும் எழுந்திடலாம்!!
ஒன்றை விட மற்றொன்று..
கொஞ்சம் சிறப்பாய்க் கூட இருந்திடலாம்..!
சிறப்பை தேடி ஓடி விட்டால்..
அதற்க்கு முடிவே என்றும் தோன்றாது!
விண்மீன் என்றும் உயர்ந்தது தான்..
அனால் இரவில்,
நிலவொளி தானே நம் தேவை!
கண்ணை என்றும் நம்பாதே..
மெய் போய் அறிய தயங்காதே...
தோற்றத்தின் மாயை ஏமாற்றும்!
அதை நம்பி மனமே மாறாதே!!
பார்ப்பது எல்லாம் பிடிக்கும்..
அடைந்திட மனமோ துடிக்கும்..
ஒரு முறை நீயும் சிந்தித்தால்..
உற்றது உனக்கே கிடைக்கும்..!!