காஸ்ட்லீ கடவுள்

காட்சி தர காசு கேட்கும்
கருணை கொண்ட இறைவா!!
பக்தி இன்று உன்னிடத்தே
வியாபாரம் ஆனது ஏன்?

நம்பிக்கையின் பலத்திநிலே
பணம் பார்க்க துவங்கியதும்,
உன்னை காணுகின்ற தூரம் கூட
பணத்தின் அளவை ஆனதுவே!!

கற்பூரம் மலர் கொண்டு பூசாரி பூஜிக்க,
பூசிவிடும் திருநீறும்,
தட்டின் கணம் கண்டு மாறிடுதே!!

இல்லார்க்கு இருக்கின்ற
ஒரு துணையும் நீ அன்றோ?
உன் பக்தியிலே வியாபாரம்
செய்வது தான் நன்றோ!?

காலனி முதல், கற்பூரம் வரை;
அர்ச்சனை முதல், அன்னதானம் வரை;
ENTRY முதல் EXIT வரை;
இன்று உன்னிடத்தில் எல்லாமே...
MONEY!! MONEY!! MONEY!!

எழுதியவர் : நேதாஜி (9-Dec-15, 9:25 pm)
Tanglish : vilai pona pakthi
பார்வை : 223

மேலே