முதல் இரவு

உறக்கம் கொள்வதற்கே இரவென்று
எண்ணியிருந்தேன் இதுவரை!
எத்தனைப் பெரிய மூடத்தனம்!!

கன்னடம் கடந்து, தமிழ் தொட;
சர்க்காரின் வீதிகளில்...
சக்கரத்தின் மேல் கழிகிறது
நம் முதல் இரவு!!

என் வாழ்வின் மிக குறுகிய இரவு இது!
உன் வெட்ப்பதால்..
இரவைக் கூட கரைத்துவிட்டாயோ?

ஜன்னல் வழியே நிலவைக் கண்டதுண்டு!
இன்றோ..
நிலவே ஜன்னலோரம் அமர்ந்திருக்கக் காண்கிறேன்!!

இருளில் இரட்டிப்பானதடி உன் அழகு!
உன் முகம் பார்த்தால்..
கண்ணாடிக்கு கூட காதல் செய்ய தோன்றும்!!

என் மடியினை இருக்கையாக்கி..
இரு கை கொண்டு அணைத்தேன் உன்னை!
தாயிடம் தவழும் பிள்ளை போலே,
கண்மூடி நீ உறங்கும் அழகை,
காண கண்கோடி வேண்டும்!!

காமம் கடந்த காதலை தந்தவளே...
காலம் முழுதும் என்னுடன்
கை கோர்த்து நிர்ப்பாயோ!!

எழுதியவர் : நேதாஜி (2-Apr-16, 7:36 pm)
Tanglish : muthal iravu
பார்வை : 340

மேலே