நாம்
நீ... நீங்கிச்செல்ல
என் விழிகள் துடிக்கும்
நான்... ஏந்திக்கொள்ள
உன் இதயம் நொடிக்கும்
நொடிகளில் இதோ ....
என் உயிரின் உரையாடல் பயணம் ...
பார்வையால் பஞ்சிலைப்போல் பறந்திட
பாவி நான், உன் அருகாமையில் இல்லாமல்
அனுதினமும் அனுபவிக்கும் அகம் மறந்த
ஆனந்தம் இதோ...
அருகில் உன்னை பார்க்கும்போது
உன் முகம் துளிரில் என் முகம் கொள்ளும் இனிய தோற்றம் ...
இக்காலம் கொண்டே நான் மறுஜென்மம் எடுக்க இதோ
இலையாய் உன்பாதம் சேர்கிறேன் ...

