இரவே போய்விடு
இரவே போய்விடு...
இருளே போய்விடு...
நான் உறக்கம் கொள்ளவே...
என் மனவே வழிவிடு!!!
நிமதி கொல்லும் நினைவுகள் வேண்டாம்,
நித்திரை கொல்லும் கனவுகள் வேண்டாம்,
தலையணை நனைக்கும் இரவுகள் வேண்டாம்,
தலைவிதி இதுவோ!?
வாழ்வே வேண்டாம்!!!
விழிநீர் வழிய வலிகள் கரையும்,
விழுந்து எழுந்தால் வாழ்க்கைப் புரியும்!
உறவுகள் வேண்டும் பகையே போ!!
உறக்கம் வேண்டும் கனவே போ!!
இன்பம் வேண்டும் வலியே போ!!
விடியல் வேண்டும் இருளே போ!!