ஆனந்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆனந்தன் |
இடம் | : தாளநத்தம் |
பிறந்த தேதி | : 02-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 21 |
இறுதிவரையில்...
நீயும் நானும் இரவு பகல்
உனக்கென நானும் எனக்கென நீயும்,
என் மகிழ்ச்சிக்கு உன் முகம்
உன் துக்கத்திற்கு என் மார்பு
ஆசையில் தொடங்கி மோகத்தில்
முடிவதில்லை நம் உள்ளம்,
படரும் அன்பில் தொடங்கி ஆயுள் முழுவதும் தொடரும் பந்தம்,
உறவுக்காக உலகம் தவிக்கும் உன்னதமான – உயிறோட்டம்
-----காதல்------
ஆதியில் தொடங்கி அனுதினமும் அழகாக பூக்கும்
அன்புடையோரின் ஆழமான கேணி.
காதல்
இருப்பவருக்கு ...
அருகில் இருக்கும்போது வெட்கம் மனதை கொள்ளும்,
அமர்ந்து பேசிட ஆவல் கொள்ளும்
அவளின் அருகில் நெருங்கிட ஆசை அலைமோதும்
போர்க்களம் தோற்றுப்போகும் அவளிடம் நெருங்கும்போது
நெஞ்சம் துடி துடித்து சாகும் தூக்கம் இல்லாமலே
இரவு பகல் இரு பொழுது என்றாலும்
அவளை நெருங்க பல பொழுது பல யுகம் கடக்கும்,
பஞ்சம் என்று காதலில் ஒன்று உண்டு என்றல் – அது
மொழி பஞ்சம் தான்.
அவளில் இரு விழிகளை பார்த்து இவன் இளம் மனது இசைக்கும்
வார்த்தைகளை கூற, உதடு காய்ந்து உள்ளம் தோய்ந்து,
உணர்வுகள் பிழிந்து, உலகம் மறந்து, உருகிடும் நெருப்பிலும் கூட
உறுதியாய் இருப்பவன், இதோ அவளிடம் உருகுளைந்து
கரு மேகத்தை கை இறுக்கி, கார் பொழுதை நீ இறக்கி
நெடு வயலில் நீர் பரப்பி, தோடு ஆழம் மண் பிதுக்கி
உழைப்பு மட்டும் உறுதி என்று, ஊண்றி விடு உன் வலுவை
துளிர் பயிருக்கு தூக்கம் இல்லை, துடித்திடுதே மண் நிறைக்க
வயல் சேறு கால் பிதுக்க, பயிர் சேரும் பசுமை நிறைக்க
வாட்டும் வெயில் தோள் சிறுக்க, மாட்டு சானம் உரம் பெருக்க
பார் இழுத்து பயிர் செய்து, பாமரருக்கு பசியாற்ற
படைத்தவனும் பயந்து போக பசித்தவனுக்கு பந்தி இட்டு
பரவசம் கொண்டாயோ...
உன் பாதம் தழுவி பரவசம் நான் கொள்வேன் .
இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய மற்றொரு கட்டுரை .... எழுத்து தோழமைகளிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன் .....
நன்றிகளுடன்
மகிழினி .....
ஒவ்வொன்றாய் ரசிக்கிறேன் உன்னை
ஒவ்வொரு நொடியும் இசைக்கிறேன் - பெண்ணை
நிஜமான தோற்றம் நினைவு இழக்க செய்யுதே
நிழலின் தோற்றம் கனவு இழக்க செய்யுதே
தொடாமல் தொடுகின்றேன் அன்பே
தொடுகையில் கரைகிறேன் பின்பே
எண்ணிய எண்ணங்களை ஏட்டில் எழுதிவிட்டேன்
மறந்தும் உன் அழகின் வர்ணனைகள் வாடாமல் இருக்க ...
காதல் உலகின் வர்ணம் உடம்பின் உதிரம்
கனவின் மரங்களும் கண்ணீரில் சிகப்பானது
தற்கொலை செய்திட நெஞ்சம் அழைத்தது
தூக்குக்கயிறும் என்னவனால் ஊஞ்சலானது
என் உலகம் உன் அருகில் தான்
நீண்ட நேரம் பேசிட ஏங்குகிறேன்
உன் நிழலில் என்னை காண்கிறேன்.
இதயத்தில் உனக்காய் துடிக்கிறேன்
மடி மேல் ஒரு நிமிடம் வேண்டும்
என் மரணம் உன் மடியில் வேண்டும்
நிலா முற்றத்தில் வீழ்ந்த எச்சம்
இலையான்கள்
தூக்க முயலுமளவிற்கு
நெத்தாகிவிட்டேன் நான்
ஒரு வன்மப்புணர்ச்சியின்
துப்பல் நான்
பிணமாவதற்கு முந்தைய
கடைசிக் கதறல் நான் - ஆம்
நிலா முற்றத்தில் வீழ்ந்த
எச்சம் நான்,!
பட்டினியின் பிரியக் காதலி!
தேவாமிர்தங்களில்லை
எனது தேடல்
பாதையில் கிடக்கும்
பழைய ரொட்டியே
எனது தேடல்
பேரழிவுகளில் வீழும்
பிணங்கள் புண்ணியம்
செய்தவை
நான் நரகத்தில்
கிடைக்கக்கூடிய
கொடிய தண்டனையின் நகல்
மனிதம் மனிதத்தை
விழுங்கும் காலத்தில்
சபிக்கப்பட்ட
அகலிகை நான் ஆனால்
என் விமோட்சத்திற்காக
எந்த பொற்பாதங்களையும்
அவன் அனுப்பவில்லையே !
பரிதாபத்தின் குறியீடாய்
என் த