ஹரிணி - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : ஹரிணி |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Jan-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 840 |
புள்ளி | : 46 |
மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !
உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)
பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)
உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)
புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)
மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)
நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி
காட்சிப் பிழைகள்-39 கயல்விழி
மனமுடைந்து மார்க்கம் இன்றி மரணவழி செல்கையிலே
வரமாய் வந்து வாழ்வு தந்த வானத்து தேவதையே...!
நடு வழியில் தவிக்க விட்டு
நீ மறைந்த காரணத்தை சொல்லாயோ.
என் அன்பில் ஏதும் குறையுண்டோ -இல்லை அகத்தினில் குறை கண்டாயோ
சொல்லிவிட்டு செல்லடி நீ
திருத்திடுவேன் என் தவறை.
தூண்டிலில் ஒரு புழுவானேன்
சுடுமணலில்
மீனானேன்.
ஸ்வரம் இழந்த வீணையாய்
சுதிசேரா ராகமாய்
துணையிழந்து நானானேன்.
ஒளிதந்த சுடர்விழியே
நீ இன்றி
சோக இருளில் மூழ்கலானேன்.
வெண்மதியே என் ரதியே
என்னை பிரிந்தது நியாயமா.?
கடல் அலையை விட்டுக் கரை பிரிந்தால்
உயிர்கள் மண்ணில் வாழுமா .?
அன
மண்ணில் பெண்ணாய் நீ, பிறப்பெடுத்த மறுநொடியே...
என்னில் இன்பமாய், வேர் விட்டது காதல் பூச்செடியே...!
விழுகின்ற வார்த்தையில், வாருணிக்கும் வரும் போதையடி !
எழமுடியாமல் தவிக்கிறேன், சிந்தும் சிரிப்பொலிகள் போதுமடி !
மணல்போல் கொட்டி கிடக்கும், நினைவு குவியல் உள்ளே !
மனம்போல் குளியல் போடு, பச்சைப் பஞ்சுருட்டான் போலே !
இருக்கின்றாயே, என் காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் ஏன், அகப்படவில்லை கண்ணுக்கு அக்காக் குயிலாக !
மின்னுகின்ற மின்மினியாய், நெஞ்சை தினம் உருக வைக்கிறாய் !
மிஞ்சுகின்ற உயிரையும், மிச்சமின்றி ஏனடி உறிஞ்சி நிற்கிறாய் !
என் உணர்வுகள் தொலைத்து, நடமா
வாசலில் நீ போட்ட ரங்கோலி
எனக்கான சிக்கு கோலம்...
தாவணியில் வருகையில்
என்னிடம் கவிதை தீர்ந்துவிடுகிறது
மொத்த உருவமாய் நீ...
அடிக்கடி நீ
மாராப்பு சரி செய்யும்போது
மனசெல்லாம் மண்வாசனை...
நீயில்லா ஊர் திருவிழாவில்
கல்லெறிந்த மண்பானை நான்...
பாவாடை சட்டையோடு
நீ திரிந்த... குளக்கரையில்...
இன்னும் சுற்றித்திரிகிறேன்
அரைக்கால் டவுசரோடு நான்...
பொங்கல் புத்தாடையோடு
நீ என்னை தேடும்... ஓரக்கண்ணில்...
எனது பொங்கல் தித்திக்கிறது...
காதலின் மலை உச்சியில்
வரையாடாய் எட்டிப்பார்த்த என்னை...
கருவாடாய் சுட்டு தின்கிறாய்
உன் கொள்ளி கண்களால்...
உன் கன்னக்குழி
எனக்கான ஆறடி...
உன் அடர் மௌனங்கள்...
வார்த்தை
இருளை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த மின்விளக்கின் அடியில்
அமைதியாய் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது
தினக்குறிப்பேடு .
உதிரம் எனும் மை தோய்ந்த சில காகித துண்டுகள்
கற்பழிக்கப்பட்ட கன்னிகளை போல
கசக்கி வீசப்பட்டிருந்தன குப்பைத்தொட்டிக்குள் .
சுவாசிக்கத் திணறிய
மின்விசிறியின் கடைசி ஆசையை சொல்ல முடியாமல் இறுகிப்போனது டக் டக் ஓசையுடன் .
அறையின் மூலையில் ஆங்காங்கே
அரண்மனை அமைத்து
அரசாட்சி செய்தது கரையான்கள் .
அழையா விருந்தாளியாய்
அடிக்கடி வந்து போனது மின்மினிகள் .
விழிகள் வேண்டிக்கொண்டது
இமைகள் இரண்டும் இன்றாவது
இணைதல்
இன்பமென்று .
எதையும் நோக்காத இவளி
அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .
உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .
மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!
துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .
தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .
சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உ
முண்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளில்
துண்டாட பட்டவள் நான் .!
அடுப்படி அடக்கு முறைக்கு
செருப்படி கொடுத்திட துடித்த
முருக்குமீசைக்கு
தலை வணங்கும் சின்னப்பெண் நான் .!
பெண் என்றால் பொம்மையல்ல
பூமிக்கு வந்த புதுமையென
எடுத்துரைத்த
பொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .
ஏளனம் செய்யப்பட்டும்
எரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .
தளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .
நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நடை
வீரம் பேசும் விரல்கள்
வியக்க வைத்த மனிதன் .
குழந்தைகள் குதுகலிக்கும்
இவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .
மூங்கில்கள் இசைகொடுக்க
இவன் தமிழின் முன்னால்
வார்த்தைக
அலுவலகத்தில் மேனேஜரின் டேபிளில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது…
உதவியாளர் : ஸார்… உங்க மனைவிகிட்டேயிருந்து போன்…
மேலாளர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்…? நீயே அட்டென்ட் பண்ணி, ‘ம்…ம்…ம்…ம்…’னு செல்லிடு!
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
அன்பான நட்பூக்களே
"இறுதி தேர்வு பட்டியல்" ல் தரப்படுத்தப்படிருக்கும் படைப்புக்களை வாக்களித்து தேவு செய்யும் இறுதி நாள் இன்று. தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தினை ஒதுக்கி படைப்புக்களை படித்து தரமான படைப்புக்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுங்கள்.
.
துறவி ஒருவரிடம் வந்த மன்னன் ஒருவன்,
“ சுவாமி எனக்கு ஞானியாக ஆசை உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டினான். “
உனக்கு வைராக்கியம் வரவில்லை அது வந்ததும் வா “
என்று சொல்லி அனுப்பினார் ஞானி.
அரசன் உடனே காட்டிற்கு சென்று ஆசிரமம் அமைத்து
தவம் செய்தான்.
அங்கு வந்த ஞானி மன்னனிடம் “ எல்லாவற்றையும் துறந்தாயா?” என்று கேட்டார்.
உடனே தான் தங்கியிருந்த ஆசிரமத்தையும் பொருட்களையும் தீயில் இட்டான் அரசன்.
“இதெல்லாம் உன் உடமைகள் இல்லை.
இயற்கைக்கு சொந்தமானவை” என்றார் ஞானி. “
-
அப்படியென்றால் என் உடம்பைத் துறக்கிறேன்”
என்று சொல்லி தீயில் விழப் போனான்.
உடம்பு பஞ்ச பூதங்களுக்கு சொந்தம்