பொன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பொன் |
இடம் | : வாழ்வது சென்னை ..பிறந்தது |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 361 |
புள்ளி | : 11 |
எனக்கான புதிரை விடுவிக்க முயலும் ஒருவன்..நான்!rnதிருவள்ளுவர்..அவ்வை..பாரதி..rnபாரதிதாசன்..ஜெயகாந்தன்..rn
குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்
குறளிலே நாம் படித்துள்ளோம்
குடும்பத்தில் மட்டும் தன் குழந்தையா ?
சிறுவர் தினம் என்று ஒரு
சிறந்த நாளை கொண்டாடி விட்டு
சிற்றின்பம் காண்பதற்கு ஒரு
சிறுமியை அழைத்தல் நன்றாகுமோ?
படிப்பது தேவாரம்
படித்து விட்டு
இடிப்பது சிவன் கோவில்
துடிக்கின்றது என் இதயம்!
தொழிற்சாலை ஒன்று வைத்து
தொண்ணூறு கோடி கண்டு விட்டு
தொலைவில் உள்ள தன் மகனுக்கு
தொங்கு தோட்டத்தில் பிறந்த நாளாம்!
தன் விருத்திக்காக வியாபாரத்தில்
தணலிடை மெழுகாய் உருகும்
தன் பெறா மக்கள் கூட்டமதை
தன்மையாக நடத்துவாரோ?
பெற்ற தாயை விட்டு ஒர
கண்கவர் அழகில்லை நான்
எனினும் எண்ணங்களில்
வண்ணம் நிறைந்தவள்...
பிறர் என் வாழ்வில் கண்ணீரை
விதைத்தாலும் புனைகை பூக்களை
பூப்பவள் நான்....
உன் கைகோர்க்கவும்,
உன் தோள் சாயாவும்,
நம் விதியில் எழுதப்படவில்லை...
உன் எண்ணங்களில் கலந்து,
உன் மனதில் வாழும்
வரம் கிடைத்தது எனக்கு...
சராசரி பெண்ணாய் இராமல்
நம் பிரிவில் காதலை ரசிக்கிறேன் நான்...!
அசர வைக்கும்
அழகை காட்டி
எனக்குள் உற்ச்சாகம்
பல நூறு கூட்டி
பார்வைக்குள்
நங்கூரமிட்டு கண்களை
இமைக்க விடாமல்
பார்க்க
வைத்துவிடுகிறான்
என்னை.....
முத்தம் இடுகையில்
முத்திரை பதிக்கவா
அவனது இதழ்கள்
செவ்விதழ்களாய்....
பூத்துக்குலுங்கும் மொத்த
பூக்களாய்
அவனது புன்னகை
பார்க்கையில்
கிடைத்திடும்
பூலோகத்திலே சொர்க்கம்....
ஒவ்வொரு முறை
பார்க்கையிலும்
வெவ்வேறு விதமாய்....
மீளமுடியா
அவஸ்த்தையிலே
ஒன்றி போகிறேன் ...
மல்லிகை பூ
மாலையும் மயங்கி
கிடக்கிறது அவனது
மார்பினில்....
குழலின் ஓசையும்
மரகத வாசமும்
மண்டியிட்டு
மடிகிறது அவன்
வசமாகிட...
இன்று
என் தலையில்
முள் கிரீடம்
சூட்டியது யார்...
கலங்கிய
கண்களுக்குள்
கல்லெறிந்து
சென்றது யார்...
கனவான
பெருந்துயரை
இன்று கவிழ்த்து
போட்டது யார்....
அழகான
என் வாழ்வை
சுனாமியாய்
பெயர்த்தெடுத்தது
யார்....
என் பொழுதுகளை
களவாடி சென்றது
யார்....
என் வார்த்தைகளை
வதைத்து போட்டது
யார்....
என் வாழ்வோடு
வலிகளை
கலந்தது
யார்...
என் மௌனத்தோடு
கண்ணீரையும் கூடவே
வெந்நீரையும்
தெளித்து சென்றது
யார்....
எல்லாமே
என்னவனின் செயலா...
செயல் தான் எனில்
ஏழு சென்மமும்
அவனை நினைத்து
தவித்து தனித்தே
கிடக்கும் வரம்
வேண்டுமெனக்க
அன்பின் சொருபமே !
அன்பின் சொருபமே !
ஆணை முகத்தோனே !
எம் ஆணவம் அழித்தோனே!
அன்னை பார்வதியின்
அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின்
ஆசை பாலகா!
அன்னையும் பிதாவும்
அகில மென்று
அனைவருக்கும் உணர்த்தியோனே!
அற்புதம் புரிவோனே !
எங்கும் இருப்போனே !
எதிலும் முதல்வனே
ஏகாந்தமானவனே!
எளிய வடிவோனே!
நவ கிரகங்களின்
உச்சியில் அமர்ந்து
நன்மை புரிந்திடுவாய்!
நா வன்மை கொடுத்திடுவாய்!
சின்னக் குழந்தைகளின்
செல்லத் தோழனே !
செல்லப் பிள்ளையாரே!
சிறப்பைத் தந்திடுவாய்
செல்வ வளத்தினைத் தந்திடுவாய்!
அறம் பொருள் இன்பம்
அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி
சுகம்தனை தருவாய்!
அன்பின்
என்னதான் சுயநல உலகம்
என்று சொன்னாலும்
எல்லோரும் எப்பொதும்
தனக்காகவே வாழ்ந்து விட்டு போவதில்லை!
அவளிடமே காசு வாங்கி
சேலை எடுத்து கொடுத்தாலும்
"எம்மவன் வாங்கி கொடுத்தான்"
என்று சொல்ல
வேறு யாரால் முடியும்
அம்மாவை தவிர!
கலைக்கொரு தோல்வி கிடையாது…கிடையாது ..கிடையாது...
எபோதும் எம் ஸ் வீ என்றால் நினைவு வரும் இரு பாடல்கள் ..ஒன்று சங்கமம் திரை படத்தில் வரும்
மழை த்துளி ..மழை த்துளி..பாட்டும் ..கன்னத்தில் முத்தமிட்டால் லில் வரும் " விடை கொடு எங்கள் நாடே"
பாட்டும்
என்ன ஒரு கனத்த ..80 வயதிலும் உச்சஸ்தாயில் பாடும் கணீர் குரல் ..இரண்டு பாடல்கள் கேட்கும் போதும் மனதை பிசையும் அவர் குரல் ..இசையின் மன்னன் என்று சொன்னால் இப்பொது கூட எழுந்து வந்து " அப்டில்லாம் இல்லைங்க தம்பி , பெரியவங்க ஆசீர்வாதம் ..எதோ கொஞ்சம் வ (...)
மறுப்பு சொல்லை தலைப்பாக்க
நீயே காரணம் ...
விலகி செல்ல
உன் இதழ் உத்தரவிட
உன்விழிகளோ
விலங்கிடுகிறது..
கடுமையை
வார்த்தையில் காட்டி
விலகிப்போவென
சொல்ல
நானோ வெட்கம் கெட்டவனாக
உன் வெட்கம் கெட
யுத்தம் தொடர்ந்தேன் ..
என்ன செய்ய ..
மீறாதே என் வார்த்தையை
என்றாய் ...
கவிதைக்கு கூட
இலக்கணம் மீறி
பழக்கம்...
இதில் மட்டும் மீறாமலா..
இறுதியில் நீ சொன்னதே
ம்ம்ஹ்ஹூம்ம் !
பலமாய் யுத்தம் செய்ய
பணித்ததாக வீறு கொண்டேன்!
ஒவ்வொரு
*****நாள்மலரிலும்
*********தேனாய்
************சூல் கொள்கிறேன்....
************வாழ்க்கை என்னை
*********சுவைக்கிறது
*****ஒரு அழகிய
பொன்வண்டாய்....! (2013)