செல்லப் பிள்ளையாரே
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பின் சொருபமே !
அன்பின் சொருபமே !
ஆணை முகத்தோனே !
எம் ஆணவம் அழித்தோனே!
அன்னை பார்வதியின்
அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின்
ஆசை பாலகா!
அன்னையும் பிதாவும்
அகில மென்று
அனைவருக்கும் உணர்த்தியோனே!
அற்புதம் புரிவோனே !
எங்கும் இருப்போனே !
எதிலும் முதல்வனே
ஏகாந்தமானவனே!
எளிய வடிவோனே!
நவ கிரகங்களின்
உச்சியில் அமர்ந்து
நன்மை புரிந்திடுவாய்!
நா வன்மை கொடுத்திடுவாய்!
சின்னக் குழந்தைகளின்
செல்லத் தோழனே !
செல்லப் பிள்ளையாரே!
சிறப்பைத் தந்திடுவாய்
செல்வ வளத்தினைத் தந்திடுவாய்!
அறம் பொருள் இன்பம்
அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி
சுகம்தனை தருவாய்!
அன்பின் சொருபமே !
அன்பின் சொருபமே !
ஆணை முகத்தோனே !
எம் ஆணவம் அழித்தோனே!........