போடுங்கம்மா ஓட்டு புண்ணியவானா பாத்து

"அரசியல் ஓர் சாக்கடை..
சுத்தபடுத்த ஆளில்லை.."
காலம் காலமாய் சொல்லிவிட்டு
கடமையை பார்க்க சென்றுவிட்டோம்..
அந்நியனை பத்திவிட்டு
அரசியல்வாதிக்கு அடிமைபட்டோம்..

தியாகத்தை முதன்மையாக்கி
தலைவனை தேர்ந்தெடுத்தால்
பண மோகத்தை விட்டொழித்து
முறையாய் அவனும் இருந்திருப்பான்..

துட்டு கேட்டு ஓட்டு போட்டால்
தூயவனாய் எப்படி இருப்பான்..
வட்டிக்கு கொடுத்ததாய் எண்ணி
வாங்கிடவே அவன் நினைப்பான் ..

இலவசத்தை பெரிதாய் எண்ணி
கைவசத்தை விட்டுவிட்டோம்..
வரி விலைவாசி ஏற்றம் கண்டு
வறுமைக்கு வாக்கப்பட்டோம்..

இனியாவது தலைமை சிறந்திட
தன்னிலை உணர்ந்திடுவோம்..
வேட்பாளரை வெறுதிட்டால்
நோடா இருக்கு அறிந்திடுவோம்..


குறிப்பு:

NOTA - இது வாக்கு இயந்திரத்தில் உள்ள ஒரு விருப்பத்தேர்வு..
இயந்திரத்தில் உள்ள வேட்பாளர் பெயர்களில் யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாதபட்சத்தில்
நமது மறுப்பை இந்த தேர்வின் மூலம் வெளிப்படுத்தலாம்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (5-Aug-15, 11:39 am)
பார்வை : 276

மேலே