வட்டார வழக்கு இலகுவாக அருமையாக கைக்கூடி வருமெனில் தொடருங்கள் இந்த பாணியை....எனது அடுத்த தொகுப்பு வட்டார தொகுப்பு உங்கள் படைப்பு அதில் கண்டிப்பாக இடம் பெறும்...
வாழ்த்துகள்... 02-Oct-2012 7:06 pm
அருமை.தேவையான படைப்பு. வட்டார பாசை ஜொலிக்கிறது.
தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கை முறை இப்போது ஒரு சில இடங்களில் கனிசமான அளவில் முன்னேறி வருகிறது.ஆனால் பெரும்பால இடங்களின் இதே சீரழிந்த நிலைமை தான் தொடர்கின்றது !
இந்த்ஹ நிலைமை எப்போது மாறும்? கேள்விக் குறிகள் தொடரும் ! 02-Oct-2012 8:14 am
மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள
வணக்கம் தோழர்களே....
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....
இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !
வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்.....
அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்....
அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============
சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்
மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி
=============திருவாளர். ஜின்னா அவர்கள் ! =============
திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் !
இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும்
படைப்பாளிகள்....!
============================
சாதி ஒழி! மதம் அழி! சாதி!
• முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய்
============================
இப்படி நாம் காதலிப்போம்
• முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498
============================
நாளைய தமிழும் தமிழரும்
• முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய்
============================
பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம்.
தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் !
இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...!
வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் ! 31-Jan-2015 9:43 am