பகல் கனவா இவள் வாழ்வில்???
கோகிலா என்று ஒரு!
கோலமகள் வீற்றிருந்தாள்!
கோயில் அக்ரகாரத்து!
கோதையிவள் எங்கலாமே!
பத்து வயது இருக்கும் போதே!
பட்டு மாமி மகனுக்கு!
பட்டத்து ராணியாகி!
பருவமடையக் காத்திருந்தாள்!
கவனமின்றி அந்த மகன்!
களத்துப் பக்கம் போகும் போது!
கருநாகம் ஒன்று வந்து!
கடித்திட்டது அவன் காலில்!
அதிஸ்டமில்லாக் கட்டையிவள்!
அதனால் தான் விதவையானாள்!
அக்காவும் அத்திம்பேரும்!
அனைவரும் தூற்றி நின்றார்!
வைகாசி ஓர் நாளில்!
வைகறைப் பொழுதின் போது!
வைதேகி மாமி சத்த வரேலா!
வைத்தியச்சி ஓடி வந்தாள்!
சிறு மொட்டாய் இருந்த அவள்!
சிங்காரப் பெண்ணானாள்!
சிறப்பொன்றும் அவளுக்கில்லை!
சின்ன விதவை அவள் பட்டம்!
அம்மாவைச் சிறு வயதில்!
அப்பாவோடிழந்து விட்டாள்!
அக்காவும் அத்திம்பேரும்!
அகில உலகம் என்று சொன்னாள்!
பருவமதை அடைந்தவுடன்!
பதைபதைப்பும் மேலானது!
பகலில் அக்கா கடைக்குச் சென்றால்!
பக்கம் வந்து நிற்பான் அத்தான்!
அந்த கொடுமை தாங்கிடாமல்!
அக்ரகார அருகில் ஒரு!
அழகுக் குடிசை போட்டுக் கொண்டு!
அப்பளம் வடகம் விற்கலானாள்!
விற்கின்ற பொருட்கள் வாங்க!
வியாபாரிகள் வந்திட்டாலும்!
விசித்திரக் கதைகள் கட்டி!
விலைமாது இவளும் என்றார்!
அண்ணன் முறையானவனும்!
அன்போடு விசாரித்தாலும்!
அவனை இவள் கணவனென்று!
அழைக்குமந்த அக்ரகாரம்!
வேதம் ஓதும் திருவாயால்!
வேசியிவள் என்று சொல்ல!
வேதனைப்படும் அவள் மனதை!
வேறெவரும் அறியலாமா!
இப்படியே கதை வாங்கி!
இருக்கின்ற அவள் வாழ்க்கை!
இனியென்ன ஆகுமென்று!
இந்த மாந்தர் எண்ணுவரோ!
பால்யமதில் கல்யாணம்!
பாசமகன் சொர்க்க லோகம்!
பாரினிலே உள்ள சுகம்!
பார்த்திலாள் அவளும் ஒன்றும்!
சுற்றமிது அவளைத் தூற்ற!
சுடுமல்லவோ அவளுள்ளம்!
சுணங்காமல் அவளை ஒரு!
சுமங்கலி ஆக்குவாரோ!
பட்டுடுத்தி பொட்டு வைத்து!
பத்து முழப் பூவும் வைத்து!
பட்டணத்தில் வலம் வருதல்!
பகல் கனவா இவள் வாழ்வில்???