என்னவனின் செயலா-ஆனந்தி

இன்று 
என் தலையில் 
முள் கிரீடம் 
சூட்டியது யார்... 

கலங்கிய 
கண்களுக்குள் 
கல்லெறிந்து 
சென்றது யார்... 

கனவான 
பெருந்துயரை 
இன்று கவிழ்த்து 
போட்டது யார்.... 

அழகான 
என் வாழ்வை 
சுனாமியாய் 
பெயர்த்தெடுத்தது 
யார்.... 

என் பொழுதுகளை 
களவாடி சென்றது 
யார்.... 

என் வார்த்தைகளை 
வதைத்து போட்டது 
யார்.... 

என் வாழ்வோடு 
வலிகளை 
கலந்தது 
யார்... 

என் மௌனத்தோடு 
கண்ணீரையும் கூடவே 
வெந்நீரையும் 
தெளித்து சென்றது 
யார்.... 

எல்லாமே 
என்னவனின் செயலா... 

செயல் தான் எனில் 
ஏழு சென்மமும் 
அவனை நினைத்து 
தவித்து தனித்தே 
கிடக்கும் வரம் 
வேண்டுமெனக்கு....

எழுதியவர் : ஆனந்தி.ரா (8-Oct-15, 6:31 am)
பார்வை : 159

மேலே