அகங்காரம் வேண்டாமே

.

துறவி ஒருவரிடம் வந்த மன்னன் ஒருவன்,

“ சுவாமி எனக்கு ஞானியாக ஆசை உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டினான். “

உனக்கு வைராக்கியம் வரவில்லை அது வந்ததும் வா “
என்று சொல்லி அனுப்பினார் ஞானி.

அரசன் உடனே காட்டிற்கு சென்று ஆசிரமம் அமைத்து
தவம் செய்தான். 

அங்கு வந்த ஞானி மன்னனிடம் “ எல்லாவற்றையும் துறந்தாயா?” என்று கேட்டார். 

உடனே தான் தங்கியிருந்த ஆசிரமத்தையும் பொருட்களையும் தீயில் இட்டான் அரசன்.

“இதெல்லாம் உன் உடமைகள் இல்லை.
இயற்கைக்கு சொந்தமானவை” என்றார் ஞானி. “
-
அப்படியென்றால் என் உடம்பைத் துறக்கிறேன்” 
என்று சொல்லி தீயில் விழப் போனான். 

உடம்பு பஞ்ச பூதங்களுக்கு சொந்தம்” என்றார் ஞானி. 

எனக்கு எது சொந்தம்?” மன்னன் கேட்டான் சற்று எரிச்சலாக.

“ உன் அகங்காரம்தான் உனக்குச் சொந்தம்.

நீ துறக்க வேண்டியதும் அதுதான்.

அது இருப்பதால்தான் உலகமே உன்னிடம் இருப்பதாக 

நினைக்கிறாய்” என்று துறவி சொல்ல

தன் தவறை உணர்ந்தான் மன்னன்..

ஆம்,நண்பர்களே.,

"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது, 
கண்ணில் விழுந்த தூசு போன்றது. 

அந்த தூசியை சுத்தம் செய்யாமல் 
உங்களால் எதையும் காண இயலாது.

எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்)

என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தை பாருங்கள்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Jan-15, 9:41 pm)
பார்வை : 427

சிறந்த கட்டுரைகள்

மேலே