குறள் வெண்பா இலக்கணம் -ஒரு பார்வை
யாவரு முறங்கினாலு முறங்கா தியங்கியே
இருக்குமா மிணைய தளம் . ----
என்ற பாடலைப் பதிந்து குறள் வெண்பா இலக்கணம் பற்றித் திருத்தி விளக்கக் கேட்டிருந்தார் திரு. கனகரத்தினம்...enakkuL பட்டத்தை இதோ தருகிறேன்:
************
காய்முன் நேரும் விளமுன் நேரும்
மாமும் நிறையும் வரும்வெள் ளைக்கே....எனபது காக்கைபாடினியார் பாடியபடி, வெண்பாவுக்குரிய நூற்பா.
இதனைப் புலவர் வெற்றியழகன் அவர்கள் கீழ்கண்டவாறு சொல்லுகிறார்:
காய்முன்னே நேரும் விளமுன்னே நேருமென
ஆய்வந்து மாமுன் நிரையாகும் -ஆய்தொடீ!
காசு பிறப்புடன் நாள்,மல ராய்முடியும்
ஆசிலா வெண்பா அறி.
எப்பொழுதும் மெய்யெழுத்துகளும், குற்றியலுகர, குற்றியலிர எழுத்துகளும் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.
காசு என்பதும் நேர்; நாள் என்பதும் நேர் ; பிறப்பு, மலர் இரண்டும் நிறை அசைகள் மட்டுமே!
வெண்பாவில் கனிச்சீர் வருதல் கூடாது.
இப்பொழுது மேலுள்ள பாடலை அசை பிரித்துத் தளை பார்த்தால் வருவது :
யா/வரு/ முறங்/கினா/லு/ முறங்/கா/ தியங்/கியே/
நேர்/நிரை/ நிரை/நிரை/நேர்/ நிரை/நேர்/ நிரை/நிரை/
கூ/விளம் / கரு/விளங்/காய்/ புளி/மா/ கரு/விளம்/
------------------------ விளமுன் நிரை ; காய்முன் நிரை இரண்டும் தளை தவறி வந்துள்ளது;
இருக்/குமா/ மிணை/ய/ தளம்.
நிரை/நிரை/ நிரை/நேர்/ மலர்.
கரு/விளம்/ புளி/மா/ மலர்/
விளமுன் நிரை -தவறாக உள்ளது;
முதலடி -இயங்கியே என்பது அடுத்த அடியில் இருக்குமாம் என்பதுடன் தளைகூட்டப்படும்பொழுது,
கரு/விளம்/ கரு/விளம்/ என்பதுடன் விளமுன் நிறையாக வருவது தவறு;
இப்பொழுது மேலுள்ள வெண்பாவுக்கான இலக்கணப் பாடலைப் படியெடுத்து வைத்துக் கொண்டு திருத்தி எழுத முயற்சிக்கவும்.
இந்தப் பாடலின் திருத்திய வடிவமாக எழுதிப் பார்க்கலாமா :
யாவர் உறங்கினும் யாண்டும் உறங்கா(து)
இயங்கும் இணைய தளம்.
விரும்பினால் நீங்களும் முயற்சியைத் தொடரலாம்...