ஐ -என் பார்வை

தமிழில் எடுத்த ஹாலிவுட் திரைப்படம் -"ஐ"
எளிமையான கதை வலிமையான திரைகதை பிரமாண்டமான காட்சிகள் துள்ளலான இசை = "ஐ"

வடசென்னையில் ஜிம் நடத்திவரும் விக்ரம் விளம்பரதுறையில் கொடிகட்டி பறக்கும் எமி ஜாக்சொனுக்கும் இடையே ஏற்படும் காதல் அதை எதிர்க்கும் வில்லன்கள் "ஐ" என்ற வைரஸை விக்ரமின் உடம்பிற்குள் செலுத்தி கூனனாக அழகில்லாதவனாக மாற்றிவிடுகிறார்கள் ...
முடிவில் பழிவாங்கினாரா விக்ரம்??!!.காதல் கைகூடியதா??!!! எனபது தான் கதை


இயக்குனர் ஷங்கரின் கற்பனை சக்தி ஒவ்வொரு படத்திலும் மெருகேறி கொண்டே வருகிறது.
எளிமையான கதையை விறுவிறுப்பான திரைகதையில் மக்களுக்கு பிடித்த வகையில் படத்தை முடித்திருக்கிறார் .

PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் ..ஒவ்வொரு காட்சியும் அழகு .அதுவும் சீனாவில் வரும் காட்சிகள் அருமை அருமை.. விக்ரமை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டி இருப்பார் .பின் பாதியில் வரும் கூனன் கதாபாத்திரம் மிகவும் அசிங்கமாக தெரிய வேண்டும் என்பதற்காக ஷங்கர் கொடுத்த ஆலோசனையாக கூட இருக்கலாம் ...

இசை படத்திற்கு இன்னொரு பலம் .. பின்னணி இசை அபாரம்..hats off to AR ரஹ்மான்..
"பூக்களே சற்று ஓய்வெடுங்கள் "பாடல் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்து.. தமிழ் கவிதை விரும்புவோருக்கு இந்த பாடல் வரிகளும் விருந்து ..பாடலை எழுதியவர் மதன் கார்கி ..


இந்த அத்துணை நல்ல முயற்சிகளையும் தாங்கி செல்வது ஒரே ஒரு மனிதன் "விக்ரம் "..
விக்ரமின் நடிப்பு உழைப்பு வேறு ஒரு நடிகனால் கொடுக்க முடியாது ..இந்த படத்தில் விக்ரமை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கும் உயிர்ப்போடு உடலை வருத்தி நடிக்க முடியாது

படம் "SIMPLY SUPERB"

எழுதியவர் : அருண்வாலி (21-Jan-15, 1:15 pm)
பார்வை : 274

சிறந்த கட்டுரைகள்

மேலே