நல்வாழ்வு வாழ

கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக -என்பது வள்ளுவர் வாக்கு .
மக்களின் இரு கண்களாய் இருந்தது "கல்வியும் ,வீரமும்".அத்தகைய கல்வியானது இன்று "காசுபணத்தின்" பின் செல்கிறது . பாமரனும் ,பணக்காரனும் பட்டம் பெறுகிறான் .பணக்காரன் பணத்தால் அடித்து வேலை வாங்குகிறான் ,பாமரனோ பரதேசியாக திரிகிறான் .அத்தகைய நிலை இல்லை என்று மார்த்தட்டும் கூட்டம் ஒருபக்கம் , மறு பக்கம்,ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் ஒரு கூட்டம்.
ஐந்து வயதில் அடியெடுத்து வைக்கும் பிஞ்சுவுக்கு ஐம்பதாயிரம் என்பதே இன்றைய கல்வியின் கொள்கையாய் மாறியதை நாம் அறிந்ததே ...

"அன்னச்சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாராயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிரச் செய்தல்
அன்னை யாவினும் ,புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே சிறந்தது " என்ற பாரதியின் கனவுக்கடல் கரையைத் தொடும் இந்நேரத்தில் கடல் கரையைக் விழுங்கிவிட்டது என்பதே உண்மை ..

"இளமையில் கல் -ஆத்திச்சூடி

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி -கொன்றைவேந்தன்

கற்கை நன்றே ,கற்கை நன்றே
பிச்சைப்புகினும் கற்கை நன்றே - நறுந்தொகை

உற்றுழி உதவியும் உருபொருள் கொடுத்தும் ,பிற்றை நிலை
முனியாது கற்றல் நன்றே - புறநானூறு

எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லாவீடு இருண்டவீடு என்க,
படிப்பிலார் நிறைந்த குடித்தனம்
நரம்பில் துடிப்பிலார் நிறைந்த சுடுகாடென்க - பாரதிதாசன் ".

இத்துணை சிறப்புமிக்க கல்வியைக்கற்று நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம் ....
பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு
பாமரனனை வஞ்சனை செய்வதை விட்டொழிப்போம்.....
தவறு செய்தால் தலைவனானாலும்
தண்டிக்கப்பட வேண்டும் ,,
தண்டனைகள் கட்டாயமாக்க வேண்டும்,,
எட்டிமிதிப்போர் ஏமாற்றுவோர்
தூக்கிலிடப்பட வேண்டும் ,,
புது சமுதாயம் படைப்போம்....நல்வாழ்வு வாழ ...

எழுதியவர் : sudarvizhi (21-Jan-15, 5:20 pm)
பார்வை : 1874

மேலே