அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
"அச்சமில்லை அச்சமில்லை ,
அச்சமென்பதில்லையே!!
உச்சிமீது வானிடிந்து விழுகின்றபொழுதினும்
அச்சமில்லை அச்சமில்லை ,
அச்சமென்பதில்லையே"!!..
என்ற முண்டாசு கவிஞனின் கூற்றுகிணங்க வாழ்ந்த காலம் காணமல் போய்விட்டது ...
இன்று "அச்சம் தவிர்த்து ,நெஞ்சம் நிமிர்ந்து" வாழ்ந்து வருகிறோம் ,காரணம் தன்னலம் ,ஆட்சி ,அதிகாரம், ஆடம்பரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் .
மதியை இழந்து மாக்களாய் மாறிவரும் இக்கால சூழ்நிலையில் உலகம் உருக்குலைகிறது ,
தாய்நாடு தத்தளிக்கிறது, இயற்கையும் செயற்கையும் போட்டிபோடுகிறது என்றால் ஐயமில்லை .
"முத்துக்கள் மிதிப்பதில்லை -அவை
முழுகாமல் கிடைப்பதில்லை ,
விழுந்து கிடந்தால் சிலந்தியும் நம்மை சிறை பிடிக்கும்,
எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழிகொடுக்கும்,
முடியாது என்று நினைத்துவிட்டால் மூச்சுக்காற்றும் நின்று விடும்,
முடியும் என்று துணிந்துவிட்டால் ,மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும் ..."
மனித சமுதாயமே !!
நீ!! நிருபிக்காவிட்டால் நிராகரிக்கப்படுவாய்,
நிருபித்தால் அங்கீகரிக்கப்படுவாய் .,,
அறிவை தலைவனாய்கொண்டு
மனதை வேலைக்காரனாய்க்கொண்டாயானால் ,
"அச்சம் தவிர்த்து ,நெஞ்சம் நிமிர்ந்தது வாழலாம்" .
அச்சத்தை தவிர்ப்போம் ,அறியாமையை அகற்றுவோம், உண்மைக்கு குரல் கொடுப்போம் ,தீமையை
தகர்த்தெரிவோம், உருக்குலையும் உலகை முன்னேற்ற முனைவோம்.ஆழ்ந்து யோசிப்போம் ,அச்சம் தவிர்ப்போம் ,நெஞ்சம் நிமிர்வோம் .....