சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 33 ராஜு வெடலெ ஜூதாமு ராரே – ராகம் தேசிகதோடி
'தேசிகதோடி' என்ற ராகத்தில் அமைந்த 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.
பொருளுரை:
மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய கஸ்தூரிரங்க ராஜன் பவனி வருகிறான், சேவிப்போம் வாரீர்!
குதிரை வாகனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய, ஒளி வீசும் நவரத்தினங்கள் இழைத்த நகைகளை அணிந்து கொண்டு கஸ்தூரிரங்க ராஜன் பவனி வருகிறான், சேவிப்போம் வாரீர்!
காவேரிக்கரையில் பவித்திரமான ஸ்ரீரங்க சேத்திரத்தில் திருவிளக்கும் சித்திர வீதியில் வேட்கையுடன் அவன் எழுந்தருளும் சேவையைக் கண்டு தேவர்கள் வானுலக மலர்களைக் கொண்டு பக்தியுடன் பூஜிக்கவும், அதை மனதில் பாவித்து தியாகராஜன் பாடவும், வைபோகரங்க (ராஜன் பவனி வருகிறான், சேவிப்போம் வாரீர்!)
(ஸ்ரீரங்க சேத்திரத்தைக் குறித்து தியாகராஜ ஸ்வாமிகள் பாடியுள்ள ஐந்து கீர்த்தனைகளுள் இது ஒன்று)
பாடல்:
பல்லவி:
ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரிரங்க (ரா)
அனுபல்லவி:
தேஜி நெக்கி ஸாமந்த ராஜு லூடிகமு ஸேய
தேஜரில்லு நவரத்நபு திவ்யபூ ஷணமுலிடி ரங்க (ரா)
சரணம்:
காவேரீ தீரமுநநு பாவநமகு ரங்கபுரிநி
ஸ்ரீ வெலயு சித்ரவீதி லோ வேட்கக ராக
ஸேவநு கநி ஸுரலு விருலசே ப்ரேமநு பூஜிஞ்சக
பா விஞ்சி த்யாகராஜு படக வைபோ கரங்க (ரா)
K V Narayanaswamy - Raju Vedale Jootamu Raare - Todi - Tyagaraja Swami என்று யு ட்யூபில் பதிவு செய்து குரலிசைக் கலைஞர் பாலக்காடு K.V.நாராயணஸ்வாமி பாடுவதைக் கேட்கலாம்.
Thyagaraja Krithis by TM Krishna | Jukebox என்று யு ட்யூபில் பதிவு செய்து குரலிசைக் கலைஞர் T.M.கிருஷ்ணா மூன்றாவது பாடலாக பாடுவதைக் கேட்கலாம்.
Raju Vedale - Sri Ranga Pancharatnas of Sadguru Thyagaraja என்று யு ட்யூபில் பதிவு செய்து குரலிசைக் கலைஞர் Duddu Radhika என்ற பாடகி பாடுவதைக் கேட்கலாம்.