மனதில் அவள் நிழல்

ஒவ்வொன்றாய் ரசிக்கிறேன் உன்னை
ஒவ்வொரு நொடியும் இசைக்கிறேன் - பெண்ணை
நிஜமான தோற்றம் நினைவு இழக்க செய்யுதே
நிழலின் தோற்றம் கனவு இழக்க செய்யுதே
தொடாமல் தொடுகின்றேன் அன்பே
தொடுகையில் கரைகிறேன் பின்பே
எண்ணிய எண்ணங்களை ஏட்டில் எழுதிவிட்டேன்
மறந்தும் உன் அழகின் வர்ணனைகள் வாடாமல் இருக்க ...