மார்க் ஜனாத்தகன் அநாதியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மார்க் ஜனாத்தகன் அநாதியன்
இடம்:  மல்லாவி,முல்லைத்தீவு (பிர
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தமிழின் காதலன்rnகவிதைகளால் ஆகrnமுயற்சிப்பவன்

என் படைப்புகள்
மார்க் ஜனாத்தகன் அநாதியன் செய்திகள்

#2009_வன்னி_ரணபூமியின்
#நினைவுகள்_சுமந்து.........

கடல் கரையை மோதி முடிய
மிஞ்சியிருப்பது
அலையின் நுரைகள்

இங்கு இளையோரெல்லாம்
கொலையுண்டழிய
மிஞ்சியிருப்பது
வயதின் நரைகள்

வதையும் சிதைவும் வலியத் தந்தபின்
எலும்புடன் ஒட்டுமா...?
சிதைந்த சதைகள்

நாங்கள் கொலையில் வீழ்ந்து
குடியோடழிந்தபின்
மீண்டும் முளைக்குமா...?
எங்களின் தலைகள்

பிஞ்சு பசியில் பீறிட்டு
அழுவது கண்டு
பால்தனை சுரக்குமா...?
பிணத்தின் முலைகள்

உணவு அற்று துவளுவோர்
கண்டபின்
ஓங்கி எரியுமா...?
வீட்டின் உலைகள்

குண்டுகள் குதறி முண்டங்கள்
சரிந்தபின்
மீண்டும் துளிர்க்குமா...?
சந்ததி உயிர்கள்

கொடும் பொ

மேலும்

உருக்கம்..நெஞ்சை விட்டு என்றும் ஆறாத வடுக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:24 am
காயத்தின் கொடுமைகள் கோரம். இரத்தம், சதை, கண்ணீர்,செந்நீர் ஜீவன் இழந்த ஊமையின் அழுகுரல் இதயமில்லாத மிருகங்களின் கொடுஞ்செயல்... 13-May-2016 2:31 pm

பிரம்ம ராட்சசனே
போதி மரக்கிளையில்
கூடுகட்டி வாழ்ந்த என்னை
போர்க்களத்தின் நடுவே
புதைத்தவனே
கண்ணியத்தின்
திரை கிழித்தபின்னும் கூட
காறி உமிழ்ந்தெனை
அசுத்தம் செய்வதில்
மீண்டும் மீண்டும்
உன் வன்ம குணத்தை
உறுதிப்படுத்திக்
கொள்கிறாய்

ஒரு புண்ணின் வலி
காய்வதற்குள்
அடுத்த சுமையை
எனக்குள் ஏற்றிவிட்டு
உன்பாட்டில்
குறட்டைவிட்டு
தூங்கிவிடுவாய்
ஒரு எரிமலையின்
வெப்பத்தை
அடிமடியில் தாங்கி துடிக்கும்
ரணம் பற்றி
கதைகளில்கூட
கண்டுகொள்ள
பிரியமில்லாதவன்
அதர்மத்தின் காதலன்

எப்போதுமே
இன்பங்களை மட்டுமே
துகிக்கத் துடிக்கும் நீ
எனக்கும் ஆசைகள்
உணர்வுகள்
இருப்பதை மறந்துவிட்டாய்
உப

மேலும்

வீறு கொண்ட வலிமையான வரிகள். எத்தனை பாராட்டினாலும் தகும். பெண்ணென்பவள் வெறும் போதைப்பொருள் என்பதிலேயே பல ஆண்களின் ஆசைகள் தீர்க்கப்படுகிறது. ஆனால் பெண்ணுக்கும் மனம் உண்டென்பதை நினைத்துப் பார்க்காத இவர்கள்தான் ஆணினத்தின் முதல் எதிரி. பெண்மையை போற்றுவோம்.வாழ்த்துகளோடு என் பாராட்டுகள். 13-May-2016 7:24 pm
பெண்மையின் வலி களை பேசும் படைப்பு. அருமை 13-May-2016 6:33 pm
மிக மிக அருமையான படைப்பு பெண்ணின் நெஞ்சிலுள்ள ஆதங்கமான ஏக்கத்தின் மொழிகள் உருக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 8:23 am

புன்னகையின் ஆனந்தக்கண்ணீர்

ஒரு பெரும் புன்னகையால்
என்னை சிறைப்படுத்தி
வைத்து விட்டு
மூச்சு திணறும்வரை
புறக்கணிக்கிறாய்

என் பெரும் மகிழ்ச்சியின்
ஒற்றை மலர்வனமான நீ
உன்னில் மலர்ந்த என்னை
இதழ் இதழாய் பிரித்து
எறிந்துவிட்டு
மீண்டும் பொறுக்கியெடுத்தென்னை
ஒட்டவைத்து
மகிழ்சியாய் ஆக்குகிறாய்

பிடிவாதத்தின் புத்திரி
அடாவடிகளின்
செல்லப்பிள்ளை
பொய்க்கோவங்களின்
புனைவு மற்றும்
என் வலிகளை
பொறுக்கமுடியாத பிரியம் நீ

எவ்வளவாய் இயலுமோ
அத்தனை நிராகரிப்பையும்
திணித்து திணித்து
என்னை ஆட்கொள்வதில்
நீ மகிழ்ந்திருக்கிறாயென்றால்
இன்னும் சிறைப்படுவேன்

பெரும் காத்திருப்பின்
பெறுமதியை

மேலும்

காதலியின் நினைவுகளில் அலை மேல் ஆடும் ஓடம் போல் நெஞ்சமும் அங்குமிங்கும் தள்ளாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-May-2016 7:13 am

நிலா முற்றத்தில் வீழ்ந்த எச்சம்

இலையான்கள்
தூக்க முயலுமளவிற்கு
நெத்தாகிவிட்டேன் நான்
ஒரு வன்மப்புணர்ச்சியின்
துப்பல் நான்
பிணமாவதற்கு முந்தைய
கடைசிக் கதறல் நான் - ஆம்
நிலா முற்றத்தில் வீழ்ந்த
எச்சம் நான்,!
பட்டினியின் பிரியக் காதலி!
தேவாமிர்தங்களில்லை
எனது தேடல்
பாதையில் கிடக்கும்
பழைய ரொட்டியே
எனது தேடல்
பேரழிவுகளில் வீழும்
பிணங்கள் புண்ணியம்
செய்தவை
நான் நரகத்தில்
கிடைக்கக்கூடிய
கொடிய தண்டனையின் நகல்
மனிதம் மனிதத்தை
விழுங்கும் காலத்தில்
சபிக்கப்பட்ட
அகலிகை நான் ஆனால்
என் விமோட்சத்திற்காக
எந்த பொற்பாதங்களையும்
அவன் அனுப்பவில்லையே !
பரிதாபத்தின் குறியீடாய்
என் த

மேலும்

உங்கள் வரிகள் , இருகின்றவர்களை இடிபோல் இதயத்தில் பதியட்டும் 07-May-2016 6:10 pm
வறுமையின் நோய்கள் தான் உலகில் மிகவும் கோரமானவை 07-May-2016 5:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (4)

அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
மேலே