புன்னகையின் ஆனந்தக்கண்ணீர்

புன்னகையின் ஆனந்தக்கண்ணீர்

ஒரு பெரும் புன்னகையால்
என்னை சிறைப்படுத்தி
வைத்து விட்டு
மூச்சு திணறும்வரை
புறக்கணிக்கிறாய்

என் பெரும் மகிழ்ச்சியின்
ஒற்றை மலர்வனமான நீ
உன்னில் மலர்ந்த என்னை
இதழ் இதழாய் பிரித்து
எறிந்துவிட்டு
மீண்டும் பொறுக்கியெடுத்தென்னை
ஒட்டவைத்து
மகிழ்சியாய் ஆக்குகிறாய்

பிடிவாதத்தின் புத்திரி
அடாவடிகளின்
செல்லப்பிள்ளை
பொய்க்கோவங்களின்
புனைவு மற்றும்
என் வலிகளை
பொறுக்கமுடியாத பிரியம் நீ

எவ்வளவாய் இயலுமோ
அத்தனை நிராகரிப்பையும்
திணித்து திணித்து
என்னை ஆட்கொள்வதில்
நீ மகிழ்ந்திருக்கிறாயென்றால்
இன்னும் சிறைப்படுவேன்

பெரும் காத்திருப்பின்
பெறுமதியை
எனக்கு
கற்றுத்தரப்பார்க்கிறாய்
பிடித்திருக்கிறது

அனாமிகா என்
அன்புக்காதலி
இமைகளுக்குள்ளிருக்கும் நீ
ஓய்வு எடுத்துக்கொள்
நான் உறங்கி
பல நாட்களாகிவிட்டது

அநாதியன்
மார்க் ஜனாத்தகன்

எழுதியவர் : மார்க் ஜனாத்தகன் , அநாதியன (7-May-16, 3:54 pm)
பார்வை : 87

மேலே