அவள்
கட்டுக்குள் பிணைந்த நூலிழையாய்
காவலன் ஒருவன் கரம்பிடித்து செல்ல,
இரு கரம் கூப்பி,கும்பிட்டு,விழுந்து-
என் பெண்ணை
நல இல்லாள் ஆக்கு என்ற
வேண்டுதல் புடைக்க,
வழியனுப்பி வைத்த மகள் ....
காவலன் அவன் வீட்டில்,
"அவள்" இன்னொருத்தியாக மாற்றப்பட ,,,,,,
ஒவ்வொரு "அவளின்"
கனவுகளும் நகர்ந்தே போகின்றன,
"அவள்" என்ற அடையாளத்தை
தொலைக்க வைக்கும் -திருமணம்
எனும் புதிய பந்தத்தால்,,