குப்பைத்தொட்டி
இச்சைக்குப்பின் எச்சையானதோ!
எச்சை மானுடத்தின் இச்சை விதையோ!
எனக்குள் விதைத்து என்னைத்தாயாக்கியதேனோ!
கட்டிலில் கலந்தபின் தொட்டிலுக்கு தோஷமென வீசினரோ!
என்னைக் கண்டு விட்டு சென்றுதான் கன்னியிழந்தாலோ!
அழாதே என் செல்லமே..
அணைக்க கைகள் இல்லா உரு!
ஆனாலும் உனைத்தாங்கியது என் கரு...
உன்னை வீசி எரிய கைகள் இருக்கும் போது ஏந்தவா இருக்காது...
அழும் உனக்கு ஆறுதல் சொல்ல எனகென்ன அருகதை...
உன்னை ஏந்திக்கொள்ள கைகள் வரும்வரை உன்னோடு அழுகிறேன்...
அன்னைக்கு அடையாளமாக குப்பத்தொட்டியை கை காட்டுங்கள்!
இன்னும் பல குழந்தைகளை பிரசவிப்பதால் ...