காதலில் நான்

காதல்
இருப்பவருக்கு ...
அருகில் இருக்கும்போது வெட்கம் மனதை கொள்ளும்,
அமர்ந்து பேசிட ஆவல் கொள்ளும்
அவளின் அருகில் நெருங்கிட ஆசை அலைமோதும்
போர்க்களம் தோற்றுப்போகும் அவளிடம் நெருங்கும்போது
நெஞ்சம் துடி துடித்து சாகும் தூக்கம் இல்லாமலே
இரவு பகல் இரு பொழுது என்றாலும்
அவளை நெருங்க பல பொழுது பல யுகம் கடக்கும்,
பஞ்சம் என்று காதலில் ஒன்று உண்டு என்றல் – அது
மொழி பஞ்சம் தான்.
அவளில் இரு விழிகளை பார்த்து இவன் இளம் மனது இசைக்கும்
வார்த்தைகளை கூற, உதடு காய்ந்து உள்ளம் தோய்ந்து,
உணர்வுகள் பிழிந்து, உலகம் மறந்து, உருகிடும் நெருப்பிலும் கூட
உறுதியாய் இருப்பவன், இதோ அவளிடம் உருகுளைந்து உலரும்
உச்சரிப்பை கேட்கும் போது மழலையும் சிரிக்கும்
என் மொழியே தெளிவானது என்று...
கலை அறிந்தவனும் கவலை கொள்வான்
இவளின் முன் இவன் மிதக்கும் காற்றலையில்
இவன் முகத்தில் இத்தனை பிம்பம் தோன்றுதே ... அது
இவனின் மனமா அல்ல இவளினால் தோன்றும் இந்த கனமா...

எழுதியவர் : ஆனந்த். க (17-May-16, 6:18 pm)
Tanglish : kathalil naan
பார்வை : 174

மேலே