உழவன்

உழவன்

கரு மேகத்தை கை இறுக்கி, கார் பொழுதை நீ இறக்கி
நெடு வயலில் நீர் பரப்பி, தோடு ஆழம் மண் பிதுக்கி
உழைப்பு மட்டும் உறுதி என்று, ஊண்றி விடு உன் வலுவை
துளிர் பயிருக்கு தூக்கம் இல்லை, துடித்திடுதே மண் நிறைக்க
வயல் சேறு கால் பிதுக்க, பயிர் சேரும் பசுமை நிறைக்க
வாட்டும் வெயில் தோள் சிறுக்க, மாட்டு சானம் உரம் பெருக்க
பார் இழுத்து பயிர் செய்து, பாமரருக்கு பசியாற்ற
படைத்தவனும் பயந்து போக பசித்தவனுக்கு பந்தி இட்டு
பரவசம் கொண்டாயோ...
உன் பாதம் தழுவி பரவசம் நான் கொள்வேன் .

எழுதியவர் : ஆனந்த். க (17-May-16, 3:54 pm)
Tanglish : uzhavan
பார்வை : 162

மேலே