உனதே வாழ்க்கை

மேற்கோள் காட்டும் மெய் நிகர் மாந்தர்,,
இதுவே சரியென்றுரைப்பாரே...!
உன் போல் எவரும் உலகினில் இல்லை,
அயலார் சொல் செவி கேளாதே!

அறிவுரை கூறும் அரைக்கோமாளிகள்..
கொண்டதும் வென்றதும் இங்கென்ன!?
கூட்டினுள் அடைக்கும் கூட்டம் இதுவே...
கூற்றுகள் கேட்டு குழம்பாதே!!

உன் மனம், உன் உடல், உனதே வாழ்க்கை!!
அவன், இவன் யோசனை உனக்கெதற்கு??
உலகம் உனதே உணர்ந்திடு மனிதா!
உன் எல்லை வின்னென்று எவன் வகுத்தான்!?

எழுதியவர் : நேதாஜி (10-May-18, 10:38 pm)
சேர்த்தது : நேதாஜி
Tanglish : unathe vaazhkkai
பார்வை : 155

மேலே