தேடல்
மதம் என்னை மாற்றவில்லை !
மனிதம் இன்னும் சாகவில்லை !
கோபம் கரைந்தது ;
கோவிலுக்குள்ளே !
சாந்தமும் கிடைத்தது ;
சர்ச்சுக்குள்ளே !
மன நிம்மதியும் கொண்டேன் ;
மசூதிக்குள்ளே !
மலராய் உணர்ந்தேன் ;
மனதுக்குள்ளே !
அறிவை தேடினேன் ஆன்றோரிடம் !
கல்வியை தேடினேன் கற்றோரிடம் !
வாழ்வை தேடினேன் வயோதிகரிடம் !
தேடல் மட்டுமே தெளிவாய் இருந்ததால் ;
தெய்வத்தை எல்லா
மதத்திலும் கண்டேன்