கடல் மாலை திட்டம்

சகுனிகளின் சூழ்ச்சியின் உதித்ததே ;
"சாகர்மாலா" !
சாமானியருக்கு புரியாத ;
சமஸ்கிரத வார்த்தை !

கடலை சுற்றி காவலர் கண்காணிப்பு !
கட்டுமரங்களும் காணாமல் போகும் !
காற்று வாங்கவும் கடிவாளம் !
சுவாசிக்கும் காற்றுக்கும் சுங்க சாவடி !

கண்ணுக்கு தெரியாத கடல் வளமெல்லாம் ;
கண்ணெதிரே காணாமல் போகும் !
வீதியில் நிற்கும் மக்களோடு ;
வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் !

எதிர்க்க துணிவிருந்தாலும் -
எதிர்க்கட்சி என்பது வலுவில்லாததால் ;
ஏக்கம் மட்டுமே !
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்லவே நமக்கு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (4-Feb-18, 10:44 am)
பார்வை : 133

மேலே