ஒற்றுமை

விழித்திடு தமிழா! உலகம் உனது !
வீதிக்கு வந்தால் வீண் வம்பு வருமே என்று :
வீட்டோடு நீ இருந்தால் :
வில்லங்கம் தேடி வரும் !

தனி ஒருவன் நான், என் செய்வேன் என நீயும் :
தயங்காதே ஒரு பொழுதும் :
தன்மானம் கூட -
தரை நோக்கி வீழ்ந்திடுமே !

சாதி மதம் பாராமல் :
சகோதரராய் பழகிப்பார் !
சாத்தான் கூட்டத்திற்கு -
சாகுமணி சப்தம் கேட்கும் !

ஆசை ஒன்றே :
அன்பை முறிக்கும் !
ஒருவனுக்காக ஓசை கொடு !
ஒற்றுமை தானாய் வளரும் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (27-Jan-18, 2:10 pm)
Tanglish : otrumai
பார்வை : 6875

மேலே