கல்வி
அரசு பள்ளி .....
தரமான மூலப்பொருள்கள்
அனால
மோசமான தொழிசாலைகள் .
தனியார் பள்ளி .....
தகரத்தை தங்கமாக்கும்
பொண்ணை மண்ணாக்கும்
மாய கூடங்கள் .
நோக்கமோ அறிவை வளர்க்க ,
இருப்பதோ போட்டிககளங்களாய் .
அரசு ஆசிரியர் பிள்ளைகள்
தனியர் பள்ளிகளில் ...,
ஆம் , இவர்கள் சொந்த ஓட்டல்
முதலாளிகள் , ஆனால் இவர்கள் பசியாறுவது
எப்பவும் பக்கத்து ஓட்டல்களில்தான்.
பெற்றோர்கள் ....
குழந்தைகள் இவர்களுக்கு
பந்தய கார்கள் . வேகமுல் எப்போதும்
வலப்பக்க கடைசி முனையிலேயே நிற்க வேண்டும் .
மாணவர்களை.....
சிலகாலம் வான்நோக்கி வளர்ந்து
பலகாலம் பயன்தரும் தென்னைமரங்கள் அல்ல ,
தேவைக்காகவே உருவாக்கப்பட்ட
போன்சாய் மரங்கள்.