பொங்கல் ௨௦௨௪ வாழ்த்து

இனி அவ்வளவுதான் என்பது வேண்டாம், இனிமேல்தான் எல்லாம் என்பது வேண்டும்; பனிபடர்ந்த காலம் சூரியனால் விலகும், பிணி முழுதும் விலகி நிலவென ஒளிரும்: குனிந்த நிலைமாறி நிமிர்ந்த நடையென மாறும், பணி தொடர்ந்து உயர்ந்த நிலையில் சேரும்; தணிந்து உள்ளம் பரவசமாய் துளிரும். கனியாய் கையில் தானாய் வந்து சேரும். தித்திக்கும் பொங்கலுடன் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (13-Jan-24, 12:51 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 72

மேலே