தீபாவளி வாழ்த்துக்கள்

திரும்பிய போது தான், கடந்த பாதை
கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பி வாழ்ந்த வாழ்க்கை தான்,
நல்ல முறையில போயிருச்சு.
நடந்த தெல்லாம் நல்லது தான்னு,
நாலு தெசயிலும் சொல்லு றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு,
பட்டறிவா விளக்கு றாங்க.
காலம் தந்த பாட மெல்லாம்,
மனசுலேயே பதிந்சு ருச்சு; ஆல விழுது போல உறுதியாக,
இருந்து விட்டா அதான் நல்லதுவாம்.
2021 தீப ஒளியில் நான் மாத்திரமல்ல, நீங்களும் தான், வாழ வாழ்த்துக்கள்; என ஆணைக்குளம், சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (6-Nov-21, 9:19 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 61

மேலே