பணம்

ஆசிரியத் தாழிசை
*****************************
பந்தமோ பாசமோ பசிக்கொரு உணவோ
சொந்தமோ சுற்றமோ சொர்க்கமோ நரகமோ
அந்தமோ ஆதியோ அனைத்திலும் பணமே
**
இன்பமோ துன்பமோ ஏற்றமோ தாழ்வோ
கன்னலோ வேம்போ கனிரசச் சாறோ
உன்வச மாகிட உதவிடும் பணமே
**
அன்னையோ தந்தையோ அண்ணனோ தம்பியோ
மன்னவன் மந்திரி மாமேதை யாயினும்
மின்னிடக் கைப்பணம் மேவுதல் வேண்டுமே
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Nov-21, 1:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 120

மேலே