தமிழ் புத்தாண்டு வாழ்த்து

நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.

நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.

இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.

சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (15-Apr-23, 11:59 am)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 25

மேலே