கள்வெறி கொள்ளுதடி தமிழ்நாடு
சிந்தியல் வெண்பா
ஈனபுத் திக்கள்வன் ஈச்சன்கள் ளைத்தேடி
மானக் குடிப்பன் மரியாதை இல்லாத
வீணன் கதையை விடு
அற்றைநாளில் கள்ளில் ஆன வகையுண்டு
இற்றைநாளில் பிராந்திரம் விஸ்கிஜின் என்றெல்லாம்
போற்றிக் குடிக்கும் உலகு
குடியை குடிக்க குடியது மூழ்கும்
தடியர் குடித்து அடிபடுவர் எங்கும்
மடிக்கா சினைத்தொலைக்கும் மாண்பு
தொன்றுதொட்டு கள்ளைக் குடிப்பர் சிலபேரும்
அன்றுமேக்கள் தீண்டார் அநேகம் உலகில்
இன்றுகுடிக் கார்யில்லை ஈண்டு
கள்குடித் தாடவீதி கண்டால் அரசடைக்கும்
ஒள்ளறையுள் ளன்று ஒருதண்ட னையுமில்லை
கள்குடிக்க இன்றதைக் காண்
ஊரில் குடிப்பரன்று மூன்றுநான் கெண்விரலில்
ஊரிலின் றுக்குடியார் மூன்றுநான் கெண்விரலில்
காரியுமிழ் நல்குடிப்பெண் காண்
குடியைத்தண் டித்த முடியரசு அன்று
குடியையின்று விற்கும் குடிகெடுக்கும் மந்த
குடிமந் திரிகளைக் கொல்
.
.
.....