தீபாவளி

தீபாவளி

ஓசையின்றி நாம் உறங்கும் அதிகாலை வேளையிலே
ஓசையுடன் ஒருவெடிச் சத்தம் வந்து துயில் எழுப்ப
பூச்சட்டியும் மத்தாப்பும் இரவுக்கு வண்ண ஒளியூட்டிட
விண்ணிலும் வர்ணசாலங்கள் கண்களுக்கு விருந்தாகிட
அன்னையவள் கைசூட்டில் எண்ணைதனை தலையேந்திட
சுடுநீருடன் சிகைக்காயும் கலந்து குளித்து முடிக்கையில்
அறுசுவை பண்டங்கள் வயிறுக்கு அழைப்பு மணி அடிக்க
புத்தாடை அணிந்து பெரியவரும் குழந்தைகளும் கலகலக்க
புன்னகை காட்டிய முகம் கொண்டு சுற்றத்தையும் உறவையும்
புத்துணவு வகைகளைத் தட்டில் வைத்து அழைத்து சுவைத்திட
வந்ததம்மா தீபத்தின் ஒளியோடு தீபாவளி நாம் கொண்டாடிடவே

எழுதியவர் : கே என் ராம் (2-Nov-24, 3:58 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : theebavali
பார்வை : 19

மேலே