கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 4 பா 16 17 18 19 20

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 4 பா 16 17 18 19 20

16.
ஞானத்தால் அஞ்ஞானம் நாசத் தினையடைந்தால்
ஞானம் அவர்களுக்கு வானில் ஒளிர்கின்ற
ஞானஞா யிற்றைபோ லாம்

17.
பரத்திலே புத்தியை வைத்த ஒருத்தன்
பரத்திலே ஆத்ம சொருபத்தை காண்போன்
பரத்தில் உறுதியைக் கொண்டிருக் கின்றோன்
பரமே புகலிடம் ஆனோனும் மீண்டும்
வரமாட்டான் இப்பிறப் பால்

18.
ஒழித்தஞானி அந்தணன் யானைபசு பாலும்
இழிநாயி னின்பாலும் நாயுண்போன் பாலும்
அழியா சமநோக்கா ளன்

19.
வெல்வான் சமமனத்தான் இம்மை யுறுதியால்
நல்லபரம் தீங்கற்ற நற்சம தன்மையது
வெல்வான் நிலைப்பான் பரம்

20.
பரமறிந் தோன்பரத் தில்நிலை பெற்றான்
பரவறிவில் நல்லுறுதி கொண்டவன் ஆவான்
பரமன்றி ஒன்றில் மனக்குழப்பம் கொள்ளான்
விரும்பியதை பெற்றுமகி ழான்துன் பமுறான்
விரும்பா ததைபெருங் கால்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-24, 4:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 13

மேலே