கத்து -னா சத்து
உன் பையனுக்குப் பேரு வச்சிட்டயா வச்சேஷ்
@@@@@@@
இல்லடா.கன்னேஷ் நான் கேரளா போயிருந்த போது தான்
குழந்தை பிறந்த
தகவல் கெடச்சது. அங்க நான் ஒரு பெயர்ச் சொல்லைக் கேட்டேன்.
அதையே என் பையனுக்கப் பேரா வைக்கலாம்னு இருக்கிறேன்.
@@@@@@@@@@@@
என்ன சொல்லுடா அது?
@@@@@@@
கேரளாவில் நான் ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். அஞ்சலர்
என் நண்பரிடம் ஒரு ஒரு பதிவு அஞ்சலைக் கொடுத்தார், உடனே
அவர் "அச்சா, ஞான் பறஞ்ச கத்து வந்நு"னு கூறினார்.'கத்து'னா
'கடிதம்'னு நண்பர் சொன்னார். அதையே என் பையனுக்குப் பேரா
வைக்க முடிவு பண்ணீட்டேன். தமிழர்களில் பெரும்பாலோர்
இந்திப் பேரை அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கறாங்க. நான் நம்ம
உடன் பிறந்த மொழியின் பெயர்ச் சொல்லை என் பையனோட
பேரா வைக்கிறேன்.
@@@@@@@@@@@
நல்லதுடா நண்பா. என் மனைவி கிரிக்காவிற்கு இன்னிக்கு ஆண்
குழந்தை பிறந்திருக்குது. உன் பையன் 'கத்து'னா என் பையன்
'சத்து'டா.
@@@@@@@
சத்து தமிழ்ச் சொல்லா இருக்குதே?
@@@@@
'சத்து' இந்திப் பேருன்னு சொலிட்டாப் போதும் எல்லொரும் அந்தப்
பேரை "ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்கடா. தமிழர்கள் தங்கள்
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்களை வைக்கிறதைத் தான்
கேவலாமா நினைக்கிறாங்க.
@@@@@@@@@@@
நாம் நல்ல நண்பர்கள். எதிர் காலத்தில் 'கத்து'வும் 'சத்து'வும் நல்ல
நண்பர்களா இருக்கட்டும்.