அவிச்சை

அவிச்சை, அவிச்சை, அவிச்சை

@@@@@@@@

ஏனுங்க எதை அவிக்கப் போறீங்க? நீதிமன்றத்தில் மூணு தடவ ஒரு


பேரைக் கூப்படற மாதிரி 'அவிச்சை, அவிச்சை, அவிச்சை'னு மூணு

தடவ சொல்லறீங்க?

@@@@@@@@@@@

நான் நீதிமன்றத்தில் வேலை பார்க்கிறவந்தானுங்க. ஒரு பேரை

மூணு தடவை கூப்பிட்டு அதே பழக்கமாகிப் போச்சுங்க.


@@@@@@@@@@

சரி எதையோ அவிக்கறப்பதைப் பத்தி மூணு தடவ சொன்னீங்க?

@@@@@@@@@@@


ஐய்யோ. எதையும் அவிக்கிறது இல்லங்க. எங்க பேரன் பேரு

'அவிச்சை'. தமிழ் அவிச்சல் இல்லங்க. ஹீப்ரு மொழிப் பேரு. நீங்க


எல்லாம் உங்க பிள்ளைகளுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதப் பேரை

வைப்பீங்க. எங்க பையன் ஐ சி எஸ் தேர்ச்சி பெற்று இஸ்ரேல்

நாட்டில் இந்திய நாட்டின் தூதுவரா இருக்கிறான். அவனோட

பையன் தான் அவிச்சை. அருமையான பேருனு சொன்னான்.

அது தான் தெரியும். அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு

தெரியாதுங்க.

@@@@@@@@@@@@@

உங்க பேரன் பேரைக் கேள்விப்படற தமிழர்கள் 'கவிச்சை,

சவிச்சை, சிவிச்சை' இது மாதிரி பல பேருங்கள அவுங்க

பிள்ளைகளுக்கு வச்சு 'ஹீப்ரு' பேருனு பெருமையாச்

சொல்லிக்குவாங்க.

@@@@@@@@@@@@@

நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு உண்மைதானுங்க.

தமிழர்களுக்குப் பிடிக்காத பேருங்க தமிழ்ப் பேருங்க மட்டும் தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Name 'Avichai' generally means 'My Father is Alive' is a Masculine (or Boy) name. Name 'Avichai' has Hebrew origin.

எழுதியவர் : மலர் (2-Nov-24, 5:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 3

சிறந்த நகைச்சுவைகள்

மேலே