நன்மதி வெண்பா - நூல் - பாடல் 63

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மெய்ம்மை நெறிநிருபன் மீறி யொழுகுதல்வெங்
கைம்மைப்பெண் வீட்டிலதி காரமுறல் - பொய்ம்மையொன்றே
மேயகணக் கன்சுகுண மேவலிவை நன்மதியே
தீய பயக்குமெனச் செப்பு! 63

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (2-Nov-24, 7:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே