தீபாவளி வாழ்த்து 2020

வாழும் நிலையில் குழப்பம்,
வசமற்று இருப்பது பழக்கம்,
வீழும் நிலையிலும் தயக்கம்,
தெளியுமா இந்த மயக்கம்,

முடங்கியிருந்த மூளைதனை
அறிவுகொண்டு எழுப்பிவிடு,
அடங்கியிருந்த இதயம்தனை
ஆற்றல் கொண்டு இயங்கவிடு,

உதவிக்கு இறைவனைத் தேடிடுவீர்,
கண்களிலே சாத்தியமா படமாட்டான்,
கதவுக்கு அருகினிலே இருந்திடுவான்,
ஆனாலும் உன் கையைவிடமாட்டான்,

"மனிதம்" கொண்ட மனிதனை அனுப்பிடுவான்,
அவனும் உரிய நேரத்திலே வந்திடுவான்,
கணிதம் தப்பாது நிலைமைதனை சரிசெய்வான்,
மலர்ந்த முகத்துடன் உனைவெளிக் கொணர்வான்.

௨௦௨௦ ன் தீப ஒளியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்,
உங்கள் அன்புள்ள சங். சொர்ணவேலு, கணக்காளர்,
ஆனைக்குளம், (இருப்பு) கோவை

எழுதியவர் : சங். சொர்ணவேலு (17-Nov-20, 4:54 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 108

மேலே