காதல்

கார்த்திகை பிறந்தது கூடவே கொஞ்சம்
குளிரும் சேர்த்து வந்தது இதமாக
அதோ .... அதோ ... அவள் எதிர்வீட்டு
பைங்கிளி வாசல் தரையை மெழுகி
கோலம்போட்டாள் பார்த்து மகிழ்ந்து
கொஞ்சம் தன்னையும் அறியாமல் என்வீட்டை
நோக்கிப் பார்க்க அங்கே என்னைக்கண்டு
நாணம் தாக்க ஓடிவிட்டாள் உள்ளே
இறைவா படி அழைப்பாயா அவள்
என்னவளாய் என்மனதில் வந்துசேர
என்றெண்ணி அந்த இனிய கற்பனை
நினைவை நிரப்ப என்வீட்டுள்ளே நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-20, 1:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே