கலப்பை கனவுகள்
களவாடப்பட்ட கடல்நீர்
மண்மீது மழை நீராக....
களவாடப்பட்ட மழைநீர்
மனிதர்மீது “மறை நீராக...”
களவு போனதை தேடும்
மண்ணின் பசுமை....
களவு போனதே தெரியாதது
உழவனின் விழிநீர்...
உழவைத் தேடும் மண்புழுவதன்
கலப்பை கால்களும்...
பிளவைத் தேடும் உழவனின்
நிலவதன் கால்களும்...