xavier arun - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : xavier arun |
இடம் | : சேலம், tamilnadu |
பிறந்த தேதி | : 31-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 186 |
புள்ளி | : 15 |
ஆசிரியர்
நானும் என்பதே
காணாச்செய்த – என்
பேனாவின் கவியே!
தேனாய் சுவைப்பதே
நானாய் மாறினேன் – என்
பேனாவின் கவியே!
விரலிடை நுழைந்து
சரவெடி பிணைத்தாய் – என்
பேனாவின் கவியே!
சொல்லில் சண்டையடி!
அவளைக் கானாவிழி – என்
பேனாவின் கவியே!
• பாக்களோடு பூக்களும்
பாமாலை யாகிடவே
பாற்கடற் கடைந்திடும்
பாவலன் ஆனேனடி !
• பாதைகள் கடந்திடும்
பாதங்களை தேடினேன்!
பாதையோர புற்களும்
பூக்களென சிரிக்குதடி!
• நெற்கதிரோடு நானும்
நாற்றங்கால் பயிரானேன்!
நெற்றியோடு குங்குமம்
நற்றுந்தன் உயிராவேன்!
• மாட்டின்நடை நிலமதை
மாண்புற செய்யுமடி!
மெட்டியோலி ஓசையெனை
மேன்மையற செய்யுமடி!
• பிளவுகண்ட நெஞ்சமதில்
உழவனைப் போலானேன்!
உளவுகின்ற நீ(ரி)யில்லையே..!
• மதியோடு உறக்கமில்லை!
மேணிகண்ட வெப்பத்தினால்…
கார்முகிலே நீ(ரி)யில்லையே!
• வாடி நின்ற மலரானேன்!
பாட மறந்த குயிலானேன்!
பா(ர்)மழையே நீ(ரி)ல்லையே!
• குளிரூட்டி வேண்டாமடி!
குளிர் ஊட்டும் எந்தன்
பனி நிலவே நீ(ரி)யில்லையே!
வேதனைகள் வேண்டுமடி !
தேவதையுன் மடி சாய…..
வேதங்களும் தோற்குமடி!
தேவதையுன் சொற்கேட்டு…
காலணிகளும் பாரமடி!
காத்திருக்கும் வேளையிலே…
காலனும் தூரமடி !
கைப்பிடித்த உன்னருகே…
சுழலுகின்ற மின்விசிறி
சுழற்றுதடி என்னினைவை…
சிலிர்க்கின்ற கண்விசிறி
சிந்தியவளை காணாது ….
அரியணை கோலங்கள்
அலங்கார தேர்தலிலே….
சரியணை கார்முகிலாய்
வருகின்ற வெண்ணிரவே…
வாடுகின்ற பயிரெல்லாம்
வானவளை தேடுதடி !
வாடிவிடும் உயிரெல்லாம்
வருடுகின்ற விரல் தேடுதடி !
களவாடப்பட்ட கடல்நீர்
மண்மீது மழை நீராக....
களவாடப்பட்ட மழைநீர்
மனிதர்மீது “மறை நீராக...”
களவு போனதை தேடும்
மண்ணின் பசுமை....
களவு போனதே தெரியாதது
உழவனின் விழிநீர்...
உழவைத் தேடும் மண்புழுவதன்
கலப்பை கால்களும்...
பிளவைத் தேடும் உழவனின்
நிலவதன் கால்களும்...
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உம்மிரு கண்கள் என்றறிந்தீரே .. !
மழைநீரும் “ மறை நீரும் ”
பசுமையின் கண்கள் என்றறீவீரோ... ?
மறையுரை வேதங்களும்
திரையுலக சேதங்களும்
எவற்றை செய்கிறதோ ... ? அறியேன்..
தவறை உணர்வீரோ....?
இயற்கையன்னை தொலைத்தோம்..!
செயற்கைதனை அழைத்தோம்..!
மழை நீரை வடித்தோம்..!
“ மறை நீரை ” அறியோம்..!
மனிதனாய் வாழ்வோமா.....???
தன்
இதழால் இயலும்
மொழியால் இசையும்
விழியால் நாடகமும்
கண்டவள் என் மொழியரசி...!
என்
வாழ்வில் இலக்கணமும்
தாழ்வில் தலைக்கணமும்
பிறழ்வில் வழித்துணையும்
உணர்த்தியவள் எனது இல்லத்தரசி!
மனதில்
பயிர்களிடம் வாழ்வையும்
உயிர்களிடம் தாழ்வையும்
செயல்களிடம் வேள்வியையும்
காணச்செய்தவள் என் உள்ளத்தரசி!
உதிரமதில்
கண்ணிரை தண்ணிராய்
பெண்மையை மென்மையாய்
உண்மையின் எண்ணமாய்
உயிர்வாழ்பவள் என் விண்ணரசி!
• தெய்வத்தின் புன்னகை...!
உழவனிடமும்... குழந்தையிடமும்...
• கருமேகக் கூட்டம்
உழவனின் கருவறை...!
இயற்கையின் திருவருள்...!
• இறைவனை காணுங்கள்..!
வேதனையில் விழிநீர் வடிவில்...
சோதனையில் மொழியாறாய்...
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
என்னுள் சில கேள்விகள் ......
௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?