தமிழும் அவளும்
தன்
இதழால் இயலும்
மொழியால் இசையும்
விழியால் நாடகமும்
கண்டவள் என் மொழியரசி...!
என்
வாழ்வில் இலக்கணமும்
தாழ்வில் தலைக்கணமும்
பிறழ்வில் வழித்துணையும்
உணர்த்தியவள் எனது இல்லத்தரசி!
மனதில்
பயிர்களிடம் வாழ்வையும்
உயிர்களிடம் தாழ்வையும்
செயல்களிடம் வேள்வியையும்
காணச்செய்தவள் என் உள்ளத்தரசி!
உதிரமதில்
கண்ணிரை தண்ணிராய்
பெண்மையை மென்மையாய்
உண்மையின் எண்ணமாய்
உயிர்வாழ்பவள் என் விண்ணரசி!