மறை நீரும் மழை நீரும் உழவனின் வலிநீர்
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உம்மிரு கண்கள் என்றறிந்தீரே .. !
மழைநீரும் “ மறை நீரும் ”
பசுமையின் கண்கள் என்றறீவீரோ... ?
மறையுரை வேதங்களும்
திரையுலக சேதங்களும்
எவற்றை செய்கிறதோ ... ? அறியேன்..
தவறை உணர்வீரோ....?
இயற்கையன்னை தொலைத்தோம்..!
செயற்கைதனை அழைத்தோம்..!
மழை நீரை வடித்தோம்..!
“ மறை நீரை ” அறியோம்..!
மனிதனாய் வாழ்வோமா.....???